பொதுவான கேள்விகள்
கேள்வி வகையைத் தேர்ந்தெடுத்து, பதிலைக் காண கீழே உருட்டவும்:
Q. என் அக்கவுண்ட் ரீச்சை எப்படி மேம்படுத்துவது? நிறைய பின்தொடர்பவர்கள Followers எப்படி பெறுவது?
உங்க அக்கவுண்ட் ரீச்சை மேம்படுத்தவும் நிறைய Followers பெறவும் இதோ சில வழிகள்:
மேலும் தெரிஞ்சுக்கணுமா? Growing on Instagram பற்றி மேலும் here தெரிந்து கொள்ளலாம்.
Q. நான் தொடர்ந்து Reels போஸ்ட் செய்கிறேன் ஆனால் Followers எண்ணிக்கை வளரவில்லை, என்ன செய்வது?
நீங்க தொடர்ந்து போஸ்ட் செய்து பரந்த பார்வையாளர்கள பெற சரியானவற்ற செய்வது சிறப்பு, எனவே அதை தொடருங்க! அப்படி சொன்னாலும், Followers எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்க எது காரணம் என்பதை புரிந்து கொள்வது முக்கியம்:
இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமா? நுண்ணறிவுகளைப் பற்றி மேலும் அறியலாம் here.
Q. எனக்கு நிறைய ரீச் கிடைக்கும். இப்போது ரீச் குறைந்துள்ளது, ஏன் அப்படி நடக்கிறது?
காலத்திற்கு தகுந்தது போல ரீச் மாறுவது சாதாரணம். கொஞ்ச காலமாக அப்படி ஆகிக்கொண்டு இருந்தால், கவலைப்படாதீங்க. இதை புரிந்து கொள்ள மேலே படியுங்க:
இன்னும் தெரிஞ்சுக்கணுமா? இப்படிப்பட்ட நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்கோங்க here.
Q. பல வகையான கன்டென்டை நான் முயற்சிக்கணுமா?
ஆமாம்! இப்படி முயற்சிப்பது உங்களுக்கு புது பார்வையாளர்கள கண்டுபிடிக்க உதவும். புதியவற்றை முயற்சிக்க, செய்து பார்க்க, வெற்றி பெற Reels உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது:
Q. முன்பு வைரலாகிய அதே கருத்துடைய என் தற்போதைய வீடியோ ஏன் வைரலாகவில்லை?
வைரலாவதற்கு எந்த பார்முலாவும் இல்லை, நீங்க தரமான கன்டென்டை தொடர்ந்து கிரியேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Common Account Queries
Q. Instagram ல் Verification /புளூ டிக் நான் எப்படி பெறுவது?
Instagram அக்கவுண்டுகள் புளூ டிக் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கான verification அளவுகோல்களப் பூர்த்தி செய்கிறதா என்பதத் தீர்மானிக்க பல காரணிகள் பரிசீலிக்கப்படுகின்றன:
நம்பகத்தன்மை: உண்மையான நபர், பதிவுசெய்யப்பட்ட வணிகம் அல்லது நிறுவனத்தை குறிக்க வேண்டும்.
தனித்துவம்: நபர் அல்லது வணிகத்தின் தனித்துவமான இருப்பைக் குறிப்பது. ஒரு நபர் அல்லது வணிகத்திற்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே verify செய்யப்படலாம், மொழி சார்ந்த அக்கவுண்ட்களுக்கு விதிவிலக்குகள் உண்டு.
முழுமையானது: Instagram ல் புளூ டிக் பெற விண்ணப்பிக்கும் போது உங்க அக்கவுண்ட் பப்ளிக்காக, பயோ உள்ளதாக, பிரொபைல் போட்டோவோடு செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பிடத்தக்கது: உன் அக்கவுண்ட் பிரபலமான, அதிகளவு பார்க்கப்படும் நபராக, பிராண்டாக அல்லது நிறுவனமாக இருக்க வேண்டும். பல செய்தி ஆதாரங்களில் அடிக்கடி இடம்பெறும் அக்கவுண்ட்டுகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் Instagram பணம் செலுத்திய அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட மீடியா கன்டென்டை மதிப்பாய்வுக்கான ஆதாரங்களாகக் கருதாது.
அவசியமான எல்லா அக்கவுண்ட் மற்றும் தகுதி தேவைகள நீங்க பூர்த்தி செய்தால், இப்படி நீங்க சரிபார்க்கப்பட்ட badge க்கு விண்ணப்பிக்கலாம்:
- நீங்க சரிபார்க்கப்பட்டு badge கோரும் அந்த அக்கவுண்டில் லாக்இன் செய்திருப்பத உறுதி செய்ங்க.
- உங்க பிரொபைலுக்கு போக கீழே இருக்கும் பிரொபைல் அல்லது உங்க பிரொபைல் படத்தின் மீது டாப் செய்ங்க.
- ‘more options’ டாப் செய்து, Settings டாப் செய்ங்க.
- அக்கவுண்ட் டாப் செய்து, பிறகு Request Verification டாப் செய்ங்க.
- உங்க முழு பெயர் அடித்து பின் தேவைப்பட்ட அடையாள அட்டை வகையை இணையுங்க (உ. அரசாங்க புகைப்பட ஐடி)
- ஆன்-ஸ்க்ரீனில் வரும் கட்டளைகள பின்பற்றி, Submit டாப் செய்ங்க.
பி.கு. Verfication விற்பனைக்கு அல்ல. மூன்றாவது நபர் மூலம் நீங்க Instagramல் verify செய்யப்பட முடியாது.
Q. கம்யூனிட்டி கைட்லைன்ஸ் மீறியதால் என் அக்கவுண்ட் சுட்டிக்காட்டப்பட்டது, நான் என்ன செய்வது?
கம்யூனிட்டி கைட்லைன்சுக்கு எதிராக நீங்க எதாவது போஸ்ட் செய்ததால் உங்க அக்கவுண்ட் நீக்கப்பட்டதா என்பத தெரிஞ்சு கொள்ள சிறந்த வழி Account ஸ்டேட்டஸ். இதை இப்படி நீங்க பார்க்கலாம்:
- உங்க பிரொபைலுக்கு போக கீழே இருக்கும் பிரொபைல் அல்லது உங்க பிரொபைல் படத்தின் மீது டாப் செய்ங்க.
- மேல் வலது பக்கத்தில் ‘more options’ டாப் செய்து, Settings டாப் செய்ங்க.
- அக்கவுண்ட் டாப் செய்து, பிறகு அக்கவுண்ட் ஸ்டேட்டஸ் டாப் செய்ங்க.
இங்கே, நீங்க:
- உங்க அக்கவுண்ட் நீக்கப்பட காரணமாக இருந்த, கம்யூனிட்டி கைட்லைன்சுக்கு எதிராக சென்ற உங்க அக்கவுண்டில் இருந்து நீக்கப்பட்ட எந்த கன்டென்ட்டையும் (போஸ்டுகள், ஸ்டோரீஸ், அல்லது கமெண்ட்ஸ்) பார்க்கலாம்.
- ஏன் உங்க கன்டென்ட் நீக்கப்பட்டது என்பதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
- கம்யூனிட்டி கைட்லைன்சை அணுகி மதிப்பாய்வு செய்யலாம்.
- உங்க கன்டென்டை நீக்கிய முடிவை மதிப்பாய்வு செய்ய கோரலாம்.
கம்யூனிட்டி கைட்லைன்சுக்கு எதிரான கன்டென்ட் என்று நீக்கப்படும் கன்டென்டை மறுபடி மறுபடி நீங்க போஸ்ட் செய்தால், உங்க அக்கவுண்டிற்கான ஆக்சஸை இழக்க நேரிடலாம்.
Q. என் அக்கவுண்ட்டை ஆக்சஸ் செய்யமுடியவில்லை, என்ன செய்வது?
உங்க அக்கவுண்ட்ட வேறு யாராவது ஆக்ஸஸ் செய்திருந்தால் அல்லது நீங்க லாக் இன் செய்ய முடியாவிட்டால், உங்க டெஸ்க்டாப் அல்லது மொபைல் பிரௌசர் மூலம் Instagram Help Centre ஐ இந்த பேஜ் மூலம் அணுகி உங்க அக்கவுண்ட்ட பாதுகாப்பா ஆக்குங்க.
உங்க அக்கவுண்ட்டை நீங்க ஆக்சஸ் செய்ய முடியாமல் போவது, ஏனென்றால்:
Username மற்றும் Password Troubleshooting
- உங்க பாஸ்வேர்ட் நினைவில் இல்லேன்னா, உங்க இமெயில் அட்ரஸ், போன் நம்பர், அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் அதை ரீசெட் செய்யலாம்.
- லாக்இன் செய்யும் போது, ‘get help’ டாப் செய்யுங்க, இது ‘Log in’ கீழே இருக்கும்.
- உங்க யூசர்நேம், இமெயில் அட்ரஸ், அல்லது போன் நம்பர் கொடுங்க அல்லது, அல்லது லாக்இன் வித் பேஸ்புக் டாப் செய்ங்க.
- Next டாப் செய்து திரையில் வரும் கட்டளைகள பின்பற்றுங்க.
- உங்க பாஸ்வேர்டை ரீசெட் செய்ய ஒரு லிங்க் உங்க ஈமெயில் அட்ரஸ் அல்லது போன் நம்பருக்கு அனுப்பப்படும்.
முடக்கப்பட்ட அக்கவுண்ட்
உங்க Instagram அக்கவுண்ட் முடக்கப்பட்டிருந்தால், நீங்க லாக்இன் செய்யும் போது ஒரு செய்தி அதை காட்டும். கம்யூனிட்டி கைட்லைன்ஸ் படி நடக்காத அக்கவுண்டுகள் முடக்கப்படலாம். தவறுதலாக உங்க அக்கவுண்ட் முடக்கப்பட்டதாக நீங்க நினைத்தால், நீங்க ஆப்பிற்குள் போய், உங்க யூசர்நேம் பாஸ்வேர்ட் கொடுத்து, திரையில் தோன்றும் கட்டளைகள பின்பற்றி அந்த முடிவ மதிப்பாய்வு செய்ய முடியும்.
Q. என் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது, நான் என்ன செய்வது?
உங்க அக்கவுண்ட்ட யாராவது ஆக்செஸ் செஞ்சிருந்தா அல்லது நீங்க லாக் இன் செய்ய முடியலைனா, உங்க டெஸ்க்டாப் அல்லது மொபைல் பிரௌசரில் இந்த பேஜுக்கு போய் பிரச்சனையை புகார் செய்து உங்க அக்கவுண்ட்ட பத்திரமாக வைங்க.
Q. யாரோ என் அக்கவுண்ட்ட என்னை போல பாசாங்கு செய்றாங்க, நான் என்ன செய்வது?
Instagram பாதுகாப்ப பிரதானமாக கருதுகிறது. உங்க அடையாளத்தை பாசாங்கு செய்ய யாராவது ஒரு Instagram அக்கவுண்ட் உருவாக்கி இருந்தால், நீங்க அதை சுலபமாக ரிப்போர்ட் செய்ய முடியும். உங்க Instagram அக்கவுண்டுக்குள் நீங்க லாக்இன் செய்திருந்தால், ஆப்பில் இருந்து நேரடியாக ரிப்போர்ட் செய்யாலாம், அல்லது உங்க டெஸ்க்டாப் அல்லது மொபைல் பிரவுசர் மூலம் இந்த பேஜை அணுகி விரைவாக உங்க அக்கவுண்ட்ட பாதுகாக்கலாம்.
Q. Born on Instagram யாருக்காக?
Born on Instagram என்பது கிரியேட்டர்கள மையமாக வைத்த தளம் மற்றும் இதில் கற்றுக்கொள்ள, கிரியேட் செய்ய, சம்பாதிக்க, கண்டுபிடிக்க மற்றும் ஒரு கிரியேட்டரின் பயணத்த மேம்படுத்த உதவும் வாய்ப்புகள் கிடைக்கும். Instagramல் உள்ள எல்லா கிரியேட்டர்களுக்குமான ப்ரோக்ராம் இது. உங்க பின்புலம், genre அல்லது பின்தொடர்பாளர் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், Instagram பற்றி தெரிந்து கொள்ள தகவலும் உங்க “திறமையை மேம்படுத்தவும்” இங்கே கற்று கொள்ள முடியும். சொந்த வேகத்திற்கு தகுந்த இ-லேர்னிங் கோர்ஸ், நிபுணர்களோடு நேரடியான மாஸ்டர்கிளாஸ்கள், Reel trends பற்றிய அண்மைய தகவல்கள், சம்பாதிக்கும் வாய்ப்புகள் மற்றும் இன்னும் பல விஷயங்கள வைத்து Instagram ல் என்ன நடக்கிறது என்று நீங்க தெரிந்து கொள்ளலாம்.
Q. Creator course என்றால் என்ன?
இந்தியாவின் கிரியேட்டர் சமுதாயத்திற்காக முதன் முறையாக, ஆன்லைனில் படிக்கும் கோர்ஸ் தான் Instagram ஆல் உருவாக்கப்பட்டிருக்கும் Creator Course. அது Instagram ecosystem, கிடைக்கும் tools, கம்யூனிட்டி கைட்லைன்ஸ், தளத்தில் தங்க இருப்பை அவங்க உருவாக்க சிறந்த வழிமுறைகள் போன்றவற்ற கிரியேட்டர்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு முழு வழிகாட்டி. ‘LEARN’ டாப் மூலம் அணுக முடியும் பல சிறிய மாட்யூல்கள கொண்டது இது. தங்க BOI பயணத்தின் முதல் படியாக எல்லா கிரியேட்டர்களும் இந்த கோர்ஸை முடிக்க வேண்டும் என்று நாங்க பரிந்துரைக்கிறோம்.
Q. Creator Course முடிப்பதால் என்ன நன்மைகள் உண்டு?
ப்ரோக்ராமின் எல்லா மாட்யூல்களையும் நீங்க பார்த்து முடிக்கும் போது இந்த creator course முடிவுற்றதாக கருதப்படும். அதோடு சேர்த்து, மாட்யூல்களின் முடிவில் இருக்கும் மதீப்பீடுகளை நீங்க முடிக்க வேண்டி இருக்கும். முடித்த பிறகு, உங்களுக்கு:
- Instagram ல் இருந்து ஒரு கோர்ஸ் முடித்த கடிதம்.
- Instagramல் உங்க இருப்பை வளர்க்க டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்.
- ட்ரென்ட்சில் எது புதிதாக நடக்கிறது மற்றும் உங்க கிரியேட்டிவ் எண்ணங்கள எப்படி தொடர செய்வது.
- பிராண்டுகளோடு பார்ட்னர் செய்து கேஷ் பரிசுகள வெல்ல ஒரு வாய்ப்பு.
- உங்க பிரொபைலோடு ‘BOI Recognized Creator’ சான்றிதழை சேர்த்து புது இலக்குகள அடைவது.
Q. இதை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
தோராயமாக, முழு கோர்ஸையும் முடிக்க உங்களுக்கு 2 மணி நேரங்கள் ஆகலாம்.
Q. இந்த கோர்சிற்கு விண்ணப்பிக்க என்ன செலவாகும்?
எதுவும் கிடையாது! இந்த கோர்ஸ் இலவசமானது மற்றும் Born on Instagram வெப்சைட்டில் பதிவு செய்த யாருக்கும் அனுமதி கிடைக்கும்.
Q. இந்த கன்டென்ட் பல மொழிகளிலும் கிடைக்கிறதா?
தற்போது இந்த கன்டென்ட் English, Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada மற்றும் Bangla மொழிகளில் கிடைக்கிறது.
Q. என் Creator Course முடித்து விட்டேன். கோர்ஸ் கம்ப்ளிஷன் லெட்டர் எப்படி பெறுவது?
Creator Course முடித்த பிறகு, ‘Learn’ பேஜிற்கு போய் ‘View Award’ தேர்வு செய்து உங்க கம்ப்ளிஷன் சான்றிதழை பெற முடியும். ‘My Profile’ ல் இருக்கும் awards section லும் உங்க சான்றிதழை நீங்க பார்க்க முடியும். Born on Instagramல் நடக்கும் அண்மைகால நிகழ்வுகள் எல்லாவற்றையும் உறுதியாக தெரிந்து கொள்ளுங்க.
Q. என்னால் வெப்சைட்டிற்குள் லாக்இன் செய்ய முடியவில்லை, என்ன செய்வது?
வெப்சைட்டிற்குள் லாக்இன் செய்ய முடியவில்லை என்றால் பின் வருபவை காரணங்களாக இருக்கலாம்:
1.உங்க பாஸ்வேர்டை ஒரு வேளை மறந்து விட்டால் இதை க்ளிக் செய்து புதியது பெற்று உங்க அக்கவுண்டிற்கு ஆக்சஸ் பெறலாம்.
2.பயன்படுத்தாக ஈமெயில் அட்ரஸ் பதிவு செய்திருந்தால் அல்லது ஈமெயில் அட்ரஸ் மாற்றியிருந்தால், வெப்சைட்டில் பிரொபைல் பகுதிக்கு போய் அங்கே ‘Edit Profile’ கிளிக் செய்து உங்க புது ஈமெயில் அட்ரஸ் சேர்க்கலாம்.
Q. நான் BOIயில் என் யூசர்நேம் மாற்றினால், அது Instagram குழுவோடு என் பெர்பாமென்ஸ் ஹிஸ்டரியை பாதிக்குமா?
உங்க யூசர்நேம்மை நீங்க மாற்ற விரும்பினால், அது Instagram குழுவோடு உங்க பெர்பாமென்ஸ் ஹிஸ்டரியை பாதிக்காது, என்று உறுதி சொல்கிறோம்.
Q. BOI கிரியேட்டர்களுக்கு எப்படி உதவுகிறது?
தளத்தில் உங்க இருப்பை உருவாக்கி வளர்க்க தேவையான எல்லாவற்றையும் BOI தருகிறது. Instagramல் வெற்றி பெற தேவையான எல்லா டிப்ஸ் மற்றும் ட்ரிக்குகளை நீங்க Learn செய்ய Creator Course உதவுகிறது.
சுவாரஸ்யமான Reels உருவாக்க தேவையான வாராந்திர ஆடியோ ட்ரெண்ட்கள் மற்றும் பிரபல சவால்கள நீங்க கண்டுபிடிக்க Create அனுமதிக்கிறது. எதிர்வரும் மீட்அப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள தெரிஞ்சுக்க Discover உதவுகிறது.
ஒரு BOI கிரியேட்டராக, creator course நீங்க முடித்த உடன் பல பிராண்ட் வாய்ப்புகளில் பங்கு பெற்று Earn. செய்ய முடியும்! இது எல்லாமே உங்களுக்கு பிடித்ததை செஞ்சு நீங்க பெற முடியும்!
Q. பரிசுகள், கிரியேட்டர் மீட்அப் அழைப்புகள், மற்றும் கொலாபரேஷன் வாய்ப்புகள Instagramல் நான் எப்படி பெற முடியும்?
Born on Instagram (BOI) கம்யூனிட்டி இப்போது 250கே+ பெரியது!
www.bornoninstagram.com தான் BOI பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள சிறந்த வழி. பொருத்தமான வாய்ப்புகள பற்றி சமுதாயத்திற்கு நாங்க தொடர்ந்த ஈமெயில்கள அனுப்புகிறோம். Born on Instagram, creator course ல் இருந்து கற்றுக்கொள்வது, வாராந்திர டிரெண்ட் அப்டேட்டுகள், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் நிகழ்வுகள், கேஷ் பரிசுகள், BOI Grow பிரோக்ராம், மற்றும் இன்னும் பல வகையான வாய்ப்புகள கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது.
Genre, follower எண்ணிக்கை, பார்வையாளர்கள ஈடுபடுத்தும் நல்லவகை சூழல், Instagramன் எல்லா tools மற்றும் features பயன்படுத்துவது, இருப்பிடம் மற்றும் இன்னும் பலவற்றை கொண்டு ஒவ்வொரு கிரியேட்டருக்கும் பொருத்தமான வாய்ப்புகள உருவாக்க நாங்க முனைகிறோம்.
ஒரு கிரியேட்டராக நீங்க உங்க பயணத்தில எந்த இடத்தில இருந்தாலும் நாங்க பரிந்துரைப்பது:
- வெப்சைட் மற்றும் ஈமெயில் மூலம் எங்களோடு தொடர்பில் இருங்க.
- Instagramன் புது featuresகள தெரிந்து கொள்ளுங்க.
- நிலையாக முயற்சி செய்ங்க.
Meta Meetup மற்றும் Creator Day என்பது நாட்டின் பல பகுதிகளிலிருந்து சில கிரியேட்டர்கள சந்தித்து அவர்களின் தேவைகள புரிந்து கொள்ளும் எங்க முயற்சி.
Meta Meetup மற்றும் Creator Day அழைப்புகளுக்காக, Born on Instagramல் கிரியேட்டர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்திருக்காங்க என்று நாங்க குறிப்பாக பார்க்கிறோம், மற்றும் அவங்க creator course முடிச்சாங்களா இல்லையா என்றும் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, அவர்களின் மொத்த Reel பெர்பாமன்சும் பார்க்கிறோம். லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஒவ்வொரு நகரத்திலும் சில கிரியேட்டர்கள மட்டுமே சந்திக்க அனுமதிப்பதால், உங்க முயற்சிகள் வீணாக போகாது என்றும் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் BOI கம்யூனிட்டியின் இன்னும் பல கிரியேட்டர்கள சந்திக்க வாய்ப்புகள உருவாக்க நாங்க மிக அதிகமா உழைக்கிறோம் என்றும் உறுதி அளிக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் நம்மை ஆச்சரியப்படுத்தி, மகிழ்வித்து, ஊக்கமளிக்கும் ஒரு கம்யூனிடியான BOI இன் பகுதியாக இருப்பதற்கு நன்றி.
Q. Born on Instagram பற்றி பகிர சில கருத்துக்கள் உண்டா? இங்கே பீட்பேக் கொடுங்க.
Feedback